மம்மூட்டி, மோகன்லால் நடிப்பில் உருவான பேட்ரியாட் திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்த திரைப்படம் . மலையாள சினிமாவின் பெரிய பான் இந்திய படம் என்பதால் பலரும் திரைப்பட வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர்.
இந் நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை விமான நிலையத்திற்கு வந்த மம்மூட்டியிடம்யிடம் , “நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் எப்படி பார்க்கிறீர்கள்?” எனக் கேட்கப்பட்டது.
இதற்கு மம்மூட்டி, “எனக்கு எதுவும் தெரியாது” என சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

