“உலகம் உங்கள் கையில்” – கல்லூரி மாணவிகளுக்கான இலவச மடிக்கணினி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
24 Tamil News
reporter

சென்னை:
தமிழக அரசின் “உலகம் உங்கள் கையில்” (The World Is in Your Hands) என்ற இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜனவரி 5, 2026 அன்று கல்லூரி மாணவர்களுக்காக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 6, 2026 அன்று தலைமைச் செயலகம் செல்லும் வழியில், சென்னை காமராசர் சாலையில் உள்ள இராணி மேரி கல்லூரி மாணவிகளை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, மடிக்கணினி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தமைக்காக மாணவிகள் அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் ₹2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மடிக்கணினிகளின் சிறப்பம்சங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் Dell, Acer, HP நிறுவனங்களின் மடிக்கணினிகளில்:
- Intel i3 / AMD Ryzen 3 பிராசஸர்
- 8 GB RAM
- 256 GB SSD
- Windows 11 இயங்குதளம்

